Finance-Subunits-FinancialManagment – ta

நிதி முகாமைக் கிளை

வருடாந்த ஒதுக்கீட்டுக் கணக்குகளைத் தயாரித்தல், வருடாந்த முற்பண விண்ணப்பத்தை தயாரித்தல், இணைந்த கணக்குப் பொழிப்பினைத் தயாரித்தல் என்பன எமது கிளை மூலம் மேற்கொள்ளப்படும் பிரதான செயற்பாடுகளில் சிலவாகும்…
20200529_103737

பணிநோக்கு

” நிதிப்பிரிவின் அனைத்து இலக்குகளையும் அடைந்து கொள்ள உதவும் வகையில் துணைச் சேவைகளாக, திணைக்களத்தின் கட்டுநிதி முகாமைத்துவம் மற்றும் வரவு செலவு அறிக்கையிடல், புதிய தொழில்நுட்பங்களை உச்ச அளவில் பயன்படுத்துதல் ஆகியவற்றினை மேற்கொள்ளல். “

சேவைகள்

  • வருடாந்த ஒதுக்கீட்டு கணக்குகளைத் தயாரித்தல்
  • வருடாந்த முற்பண விண்ணப்பப்படிவத்தை தயாரித்தல்
  • இணைந்த கணக்குப் பொழிப்பினைத் தயாரித்தல்
  • பிரதேச அலுவலகங்களுக்கு முற்பணம் விடுவித்தல்
  • சிகாஸ் நிகழ்ச்சித்திட்டம் மூலம் குறித்த நிறுவனங்களுக்கு ஒதுக்கீடுகளை வழங்குதல்
  • வருடாந்த பொது வைப்புப் கணக்குகளைத் தயாரித்தல்
  • திணைக்களத்தின் கட்டுநிதிக் கணக்கு, மாதாந்த முற்பண விண்ணப்பப்படிவம் என்பவற்றைத் தயாரித்தல்
மேலும் படிக்க...
  • வேதனங்கள் மற்றும் ஆளணி எண்ணிக்கை தொடர்பான அறிக்கைகளைத் தயாரித்து திறைசேரிக்கு அனுப்புதல்
  • காசோலைகளில் கையொப்பமிடல் மற்றும் காசோலைகளை மாற்றுதல் என்பவற்றிற்கு அதிகாரத்தை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
  • மக்கள் வங்கி பேராதனை கிளையில் விவசாயப் பணிப்பாளர் நாயகத்தின் பெயரில் பேணப்படும் கணக்கைப் பேணி வருதல்
  • பிணை வைப்புக்கள் கேள்வி அறிவித்தல் வைப்புக்கள் என்பவற்றிற்கு காசோலைகளை வழங்குதல்
  • கட்டுநிதிகளை திறைசேரிக்கு அனுப்புதல்
  • திணைக்கள அரசின் குறியீடு 2003.02.18 இற்குரிய வருமான வரிகளை ஆராய்ந்து வருமானக் கணக்குகளைத் தயாரிக்க உதவும் விதத்தில் வகைப்படுத்தலை தினமும் சோதனை செய்தல், மாதாந்தம் ஒப்பிடுதல் மற்றும் வருடாந்தம் அறிக்கையொன்றை தயாரித்தல்
  • திறைசேரி கணக்கு குறிப்புகளை கணக்கு பொழிப்புடன் ஒப்பிடுதல்
  • டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் பணப் புத்தகத்தின் கணக்கிலிருந்து பிரதியை திறைசேரிக்கு மாற்றி அனுப்புதல்
  • சிறிய அளவிலான கருத்திட்டங்கள் தொடர்பில் அறிக்கைகளைத் தயாரித்தல்
  • கேள்வி அறிவித்தல்தொடர்பான வைப்பு பதிவேட்டைப் பேணுதல்
  • பிணைப்பண வைப்புக்கள் பதிவேட்டை பேணுதல்
  • இந்த அலுவலகத்திற்குக் கிடைக்கப்பெறும் காசோலைகள் மற்றும் காசுக் கட்டளைகளை வங்கியில் இட்டு காசாக்கப்பட்டதன் பின்னர் பொது 172 பற்றுச்சீட்டுக்களை எழுதி தபால் செய்தல்.
  • கணக்கு அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் வங்கி இணக்கக் கூற்றுக்களை இணைத்து திறைசேரிக்கு அனுப்புதல்.
  • வருமானத்தில் இருந்து மீளச் செலுத்தும் நடவடிக்கைகள்.
  • வருமான மதிப்பீடுகளைத் தயாரித்தல் மற்றும் நிலுவை வருமானங்களைத் தயாரித்தல், நிலுவை வருமானங்களைப் புத்தகத்தில் இருந்து வெட்டி நீக்கும் நடவடிக்கைகள் மற்றும் அரை ஆண்டு வருடாந்த வருமான அறிக்கைகளைத் தயாரித்தல், வருடாந்த வருமானக் கணக்குகளைத் தயாரித்தல் மற்றும் திறைசேரிக்கு அனுப்புதல்.

நிதி முகாமைத்துவப் பிரிவு – அலுவலர் குழாம்

user

திருமதி. கே.எஸ்.டி. திசாநாயக

கணக்காளர் (இ.கண.சே.-1)

எம்மை எங்களை தொடர்புகொள்ள